2024 மே 15, புதன்கிழமை

கிளியில் 77 பேர் உயிர்களை மாய்த்துள்ளனர்

Editorial   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம்  ஆண்டு 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்களது உயிரைகளை  மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

 குறிப்பாக தொழில் வாய்ப்பின்மை, போதை பொருள் பாவனை, மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்முறை என பல்வேறு காரணங்களால் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ்  பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டில் 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்டுள்ளனர்.

இதேவேளை,  வவுனியா  மாவட்டத்தில் 41 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 பேரும் இவ்வாறு கடந்த ஆண்டில் தவறான முடிவு எடுத்து தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல் மூலம் அறிய முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .