2025 மே 19, திங்கட்கிழமை

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை

Freelancer   / 2022 நவம்பர் 06 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த  சில காணிகள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர்கள் அவற்றினை அடையாளம் கண்டு அறிக்கைப்படுத்த முன்னர், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமையாளரின் பெயர்களை மாற்றம் செய்தும் , உறுதிகளில் மோசடி செய்தும், கள்ள உறுதிகள் முடித்து, அக்காணிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் சில குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. 

எனவே, அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் உறுதி விடயத்தில் அவதனாமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறும், வாங்கப் போகும் காணிகள் தொடர்பில் தீர விசாரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X