2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

கழிப்பறை கொமடை திருடியவர் கைது

Editorial   / 2025 ஜூன் 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிப்பறை கொமடை திருடிய ஒருவரை வெல்லவாய பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்தனர். வெல்லவாய காவல் பிரிவின் வேவலவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கழிப்பறை கொமடையே இவர் திருடியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் 64 வயதுடையவர், தனது மகன் வசிக்கும் நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்றிருந்தார்.

இதனிடையே,   வீட்டின் அருகே வசிக்கும் ஒருவர் வீட்டின் அருகே ஒரு நபர் கொமடை வைத்திருப்பதாகவும், அவர் சந்தேகத்திற்குரியவராக இருப்பதாகவும் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் கழிப்பறை கொமடை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.இந்த கழிப்பறை கொமடை மதிப்பு முப்பத்தைந்தாயிரம் ரூபாயாகும்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெல்லவாய பொலிஸார், வெல்லவாய, திஸ்ஸா சாலையில் வசிக்கும் 47 வயது சந்தேக நபரை கழிப்பறை கொமடுடன் கைது செய்தனர்.

சந்தேக நபர், வழக்குப் பொருட்களுடன் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .