2025 ஜூலை 16, புதன்கிழமை

’கவி 2018’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், உலகளாவிய ரீதியில் கவிதைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேடையமைக்கும் பொருட்டு, ‘கவி 2018’ சர்வதேச கவிதைப் போட்டியை நடத்தப்படவுள்ளது.

16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்,  புதுக்கவிதையாகவோ, மரபுக்கவிதையாகவோ, தமது ஆக்கங்களை அனுப்பி வைக்கமுடியும். மரபுக் கவிதையாயின், குறைந்தது 15 வரிகளையும் புதுக்கவிதையாயின் குறைந்தது 2 பக்கங்களையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 10,000 ரூபாயும் இரண்டாமிடம் பெறுபவருக்கு 7,500 ரூபாயும் மூன்றாமிடம் பெறுவொர்க்கு 5,000 ரூபாயும் வழங்கி, கௌரவிக்கப்படவுள்ளன.

ஆக்கங்கள் அனைத்தும், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர். rctla18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, எழுதியவரின் பெயர், அலைபேசி எண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்துடன் அனுப்பிவைக்ககப்பட வேண்டும். மேலதிக விவரங்களுக்கு 071-6330991 (A. பிரேந்திரா) அல்லது 0774065070 (N.ரிஷிகேஷன்) ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .