Freelancer / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
தலவாக்கலை - மடக்கும்புர வடக்கு மலைப் பிரிவில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நபர்களுக்கு இடையில் 10,000 ரூபா கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இதற்கு காரணம் என விசாரணை மூலம் தெரியவந்து.
இந்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை வனப்பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த நபரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
31 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
37 minute ago
43 minute ago