2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டுப் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மல்லாகத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட ஜெயந்தகுமார் என்பவர்  வவுனியா கந்தன்குளத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே வந்து தங்கியிருந்து அங்குள்ள காணியினை தனிமையில் இருந்து பராமரித்து வந்துள்ளார். 

குடும்பத்தினர் குறித்த நபரை கடந்த 14 ஆம் திகதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது மனைவி நேரில் வந்து எங்கு தேடியும் கணவன் இல்லாமையினால் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கணவனை  காணவில்லையென  முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய கந்தன்குளம் பகுதியில் பொலிஸார் நேற்று (16) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காட்டுபகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவம்  கொலையா? அல்லது வேட்டைக்கு சென்ற போது ஏதாவது நடந்திருக்குமா? பல்வேறு கோணத்தில் பூர்வாங்க விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X