2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

‘காணாமல் போனோர் அலுவலகம் நிலைப்பாட்டை அறிவிக்கும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற எவரிடமும் விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு உண்டெனத் தெரிவித்த, அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் உரை குறித்த நிலைப்பாட்டை, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

கொழும்பில், கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்தவர்கள், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டிருந்தார். 

அதேநேரம், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் பலர், காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடுகள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்த சாலிய பீரிஸ், எவ்வாறாயினும், அரசியல் மேடைகளில் இடம்பெறும் கருத்துகளுக்குப் பதில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகத் என்றார்.  

இருப்பினும், முன்னாள் அமைச்சரின் உரை குறித்த அலுவலகத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X