2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காலவரையின்றி மூடப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை- ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகமானது காலவரையின்றி மூடப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது

நீதிமன்ற அறிவிப்பையும் பொருட்படுத்தாது, குறித்த பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு கட்டடத்தில் தங்கியிருப்பதால், பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப பீட மாணவர்கள் ஐவரை வகுப்புத் தடை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலை்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு கட்டடத்தில்  கடந்த 8 நாள்களாக தங்கியிருப்பதால், பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாலத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .