Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 08, புதன்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 27 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
கல்முனை ஹூதா ஜூம்மா பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கிண்ணியா கிளை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் மற்றும் விளையாட்டு நிறுவனமொன்று, காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளன என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சரத் குமார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago