Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.ரி.சகாதேவராஜா
கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 94 சதவீதமானோர் டெல்டா பிறழ்வும் ஊடாகவும், 6 சதவீதமானோர் அல்பா பிறழ்வு ஊடாகவும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அதில், 09வயது சிறுவன் ஒருவருக்கும் 81 வயது வயோதிபருக்கும் டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 4ஆம் திகதியன்று, மட்டக்களப்பில் இருந்து 49 மாதிரிகளும், திருகோணமலையில் இருந்து 18 மாதிரிகளும் கல்முனையில் இருந்து 26 மாதிரிகளும் அம்பாறையில் இருந்து 30 மாதிரிகள் என மொத்தமாக 123 மாதிரிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து பெறப்பட்டு, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன என்றார்.
அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று (08) கிடைக்கப்பெற்ற நிலையில், 123 மாதிரிகளில் 23 மாதிரிகள் பரிசோதனைக்கு உகந்தது இல்லையெனவும் 100 மாதிரிகளில் 94 டெல்டா பிறழ்வு, 06 அல்பா பிறழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
பல்கலைக்கழக அறிக்கையின் படி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 டெல்டா - 04 அல்பா - 02 பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 09 வயதுடைய சிறுவன் ஒருவரும் டெல்டா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
கல்முனை
கல்முனை பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 26 மாதிரிகளில் 17 - டெல்டா, 01 - அல்பா, 08 - பரிசோதனைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் திருக்கோவில் சுகாதார பிரிவைச் சேர்ந்த 81 வயதுடைய வயோதிபருக்கு டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
திருகோணமலை
திருகோணமலை பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 18 மாதிரிகளில் 17 - டெல்டா - 01 பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து அனைத்து மாதிரிகளும் உப்புவெளி சுகாதார பிரிவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை
அம்பாறை பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 30 மாதிரிகளில் 17 - டெல்டா, 01 - அல்பா, 12 - பரிசோதனைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், சினோஃபார்ம் வகை தடுப்பூசிகள் டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்துக்கு எதிராக மிகச் சிறப்பாக தொழிற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது எனவும், டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
3 hours ago
3 hours ago