2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குத்தகைக்கு விடப்படும் வெலிக்கடை சிறை

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சுமார் 2,630 கோடி ரூபாவை பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லனிய பிரதேசத்தில் 280 ஏக்கர் காணியில் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் சிறைச்சாலை தலைமையகமும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்பும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இந்த மூன்று திட்டங்களுக்கான செலவையும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் குத்தகையில் இருந்து ஈடுகட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணையில் உள்ள மில்லனியவுக்கு இடமாற்றம் செய்வதற்கும், பத்தரமுல்லையில் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் சுமார் 3147 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .