Editorial / 2025 ஜூலை 22 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விஷம் தெரிவிக்கின்றனர்
வந்தாறுமூலை பேக் வீதியில் வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததை அடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் அவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை குரங்கு கடிக்கு 6 பேர் உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் பெண்கள் இருந்தபோதும் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன் மாமரம் பலா மரம் போன்ற பயன் தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகிறது
அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருவதுடன் வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதை அடுத்து மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய துடன் அச்சத்தில் உள்ளதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago