2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அனந்தி

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபையில் அமைச்சராகப் பதவி வகித்த அனந்தி சசிதரன் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக, அவர் நேற்று முன்தினம் (01) மாலை தெரிவித்தார்.

அமைச்சராக அனந்தி இருந்தபோது, ஊழல் இடம்பெற்றதென, மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,எழுத்துமூலம் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிப்பதற்காக, மூன்று பேர் கொண்ட செயற்குழுவொன்றை அமைப்பதாக, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அனந்தி, “அத்தகைய குற்றச்சாட்டுகள் என்பவை, திட்டமிட்ட வகையில், என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, அரசியல் பழிவாங்கலுக்காகவே சி.வி.கே.சிவஞானம், குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .