Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடபுஸ்ஸலாவ பகுதியில் இருந்து தொழிலுக்காக தலவாக்கலை நகருக்கு வந்திருந்த இளைஞன் ஒருவன் நேற்று (04) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தின் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பருடன் குளிப்பதற்காக அங்கு சென்ற சமயம் குளத்தில் தவறி விழுந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், நீதவானின் விசாரணைகளைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் லிந்துலை பெல்கிரேவியா தோட்டப்பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்றதாகவும் விசாரணைகள் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .