Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், கனகராசா சரவணன்
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுத்து மூலமான உறுதிமொழி வழங்கப்பட இருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர்,
அதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியமென்றும் தெரிவித்த அவர், 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் பலமான சக்தியாக இருக்க முடிகின்றதென்றும் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மட்டக்களப்பு மாவட்டத் தலைமைக் காரியாலயம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (24), மட்டக்களப்பு - பூம்புகாரில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்தமையே, ரணில் விக்ரசிங்கவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதற்கான முக்கிய காரணமென்றார்.
கடந்த காலத் தேர்தல்களில், மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே, தமிழ் மக்கள், சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தனரென, அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago