2025 ஜூலை 05, சனிக்கிழமை

கூரிய ஆயுத்தால் தாக்கி நபர் கொலை

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல – தனியார் ஆடைகள் தொழிற்சாலைகொன்றுக்கு அருகில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  ​கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர், அவரது சகோதரியின் மகனுடன் மதுபானம் அருந்திகொண்டிருந்த வேளையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பின்னர் கைகலப்பாக மாறியதில், இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், துல்ஹிரிய – பங்களாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதுடைய நபரெனத் தெரிவித்தப் பொலிஸார், சந்தேகநபர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .