2025 மே 15, வியாழக்கிழமை

கெஹெலிய மீண்டும் கைது: மீண்டும் விளக்கமறியல்

S.Renuka   / 2025 மே 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இன்று  புதன்கிழமை (7) ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

 வெகுஜன ஊடகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர் பதவிகளில் தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்களை நியமித்து, அவர்களை வேலைக்கு அமர்த்தாமல், அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கி, அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு பின்னர் அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை  எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி புதன்கிழமை  (07) உத்தரவிட்டார்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .