Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூன் 26 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கையில் பணம் புழங்கும் போது பலருக்கும் பசி எடுப்பதில்லை. ஆனால், கையில் பணத்துக்கு தட்டுப்பாடு நிலவினால், மூக்கு முட்ட சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வந்து கொண்டே இருக்கும். இந்த அனுபவம் கிடைக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
நவீன யுகத்தில் சமையல் எரிவாயு இல்லாத வீடுகளே இல்லை எனலாம், நகர்புறங்களில் விறகு, மண்ணெண்ணெய் அடுப்புகளின் பயன்பாடு அரிதாகும்.
மாதத்துக்கு இரண்டு, மூன்று கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் குடும்பத்தினரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், அந்த கேஸ் சிலிண்டர் எப்போது நிறைவடையும் என்று தெரியவே தெரியாது.
அடுப்பில் வைத்த பால், திரும்புவதற்கு பொங்கி அடுப்பை அணைத்து விடுவதை போல, சமைத்துக் கொண்டிருக்கும் போதே காஸூம்தீர்ந்துவிடும். பெரும்பாலும் விடியற்காலை வேலையில் தீர்ந்துவிட்டால் திண்டாட வேண்டியதுதான்,
அப்படிதான், வௌ்ளவத்தையில் வாழும் நடுத்தர குடும்பத்தின் தலைவி, புதன்கிழமை (25) அதிகாலையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கேஸ் சுவாலை மஞ்சளாகி சுவாலையை இழுத்துக்கொண்டது. குடும்பத்தலைவன் வெளிநாட்டில் தொழில் செய்கிறார். பிள்ளைகள் இருவரும் உயர்கல்வி பயிலுகின்றனர்.
என்ன செய்வதென தெரியாத அந்த குடும்பத்தலைவி, சிற்றுண்டி சாலையில் பகலுணவை வாங்கிக்கொள்ளலாம் என தீர்மானித்து, அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.
எனினும், மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும் முன்னர், தொலைபேசியில் ஓடர் செய்து, கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டில் தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர்.
தொலைபேசி அழைப்புக்கு மேல் அழைப்புகளை எடுத்து ஒருவாறாக சமையல் எரிவாயு சிலிண்டரை வீட்டுக்கு எடுப்பித்து விட்டாள்.
அது ஒரு முகவர் நிறுவனம் என்பதால், சிலிண்டரை தூங்கிக் கொண்டு வந்தவர், தரகு பணத்தையும் சேர்த்து, 4,800 ரூபாய் எனக் கூறியுள்ளார்.
எனினும், வீட்டிலிருந்த மகள்மார் மாற்றிய பணம் இன்மையால் 5000 ரூபாய் தாளை கொடுத்துள்ளனர்.
மாற்றி தருவதாக வாங்கியவர், அந்த வீட்டு பக்கமே, பல மணி நேரமாக திரும்பி வரவில்லை. அவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு பல அழைப்புகளை எடுத்தாலும் பதிலளிப்பதே இல்லை.
எனினும், 200 ரூபாய் தான் என கைவிடாத அந்த குடும்பத்தலைவி, உரிய சமையல் எரிவாயு முகவர், நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பை எடுத்து, தனக்கு நேர்ந்த மோசடியை கூறியுள்ளார்.
என்னிடம் மட்டுமல்ல, ஏனையோரிடமும் அந்த கேஸ் விநியோகிக்கும் நபர் ஏமாற்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் இவ்வாறு அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேஸ் விநியோகம் என்ற பெயரில் இணையத்தளங்களில் விளம்பர மிட்டு, விற்பனை செய்யும் முகவர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கேஸ் அண்ணனுக்கு அக்கா கொடுத்த கேஸால், முகவர்களும் நிறுவன பிரதிநிகளும் விழிப்பாகிவிட்டனர். மறுநாளான, வியாழக்கிழமை (26) காலையிலேயே அந்த பணம், வங்கிக்கணக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
9 hours ago