2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கை - கால்கள் கட்டப்பட்ட நிலையில் யுவதி மீட்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

அம்பாறை – தமன, சீனத் தோட்டம் பகுதியில், கை - கால்கள் கட்டப்பட்ட நிலையில், யுவதியொருவர், இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி, அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக பெண்ணொருவர், வென்னப்புவ – கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட யுவதியே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .