2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கைதிகளின் ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பா?

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகெலபெலஸ்ஸ சிறையில் நேற்று முன்தினம் கைதிகள் சிலர் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அதிகாரிகள் யாரும் உள்ளனரா என்பது தொடர்பில் தேடியறிவதற்காக, சிறைச்சாலைகள் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்ற அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பல தகவல்களும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையின் சுமார் 400 கைதிகள் கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இவர்களுடன் 150 பெண் கைதிகளும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொண்டதுடன், நேற்று பகல் குறித்த கைதிகளின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .