2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளை இடமாற்றுவதில் தடை

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரை பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளத் தீர்மானத்துக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை, கொழும்பு சிறைச்சாலை, மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  பிரபல பாதாளக் குழு கைதிகள் சிறைச்சாலையில் முன்னெடுத்த சில சட்டவிரோத நடவடிக்கைகளை கவனத்திற்கொண்டு இவர்களை  பூஸா சிறைக்கு மாற்றுவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பூஸா சிறைச்சாலையில் மேலதிகமாக 50 சிறைக்கூடங்கள் இருப்பதுடன், இதில் 30 சிறைக்கூடங்கள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் உள்ளது. அத்துடன் அதில் ஒரு பகுதி ரோஹிங்கியா புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் றித்த புகலிடக்கோரிக்கையாளர்களை பூஸா சிறையின் வேறொரு பகுதியில் தங்க வைக்குமாறும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 சிறைக்கூடங்களை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் அதற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்திருப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .