2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கைதிக்கு மதுபான போத்தல்களை வழங்கிய வைத்தியர் தற்காலிக பணிநீக்கம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு இரண்டு மதுபானப் போத்தல்களை வழங்கிய சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு நேற்றிலிருந்து (24) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையை அண்மித்த ஏனைய எந்தவொரு வைத்திய மத்திய நிலையத்துக்கோ செல்வது  தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியர் தொடர்பில் சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெறும் ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை இவருக்கு வைத்தியசாலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியர் சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரியும் சிரேஷ்ட வைத்தியரொருவர் என்பதுடன் இதற்கு முன்னரும் பல தடவைகள் குறித்த வைத்தியரால் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்பட்டமைக் குறித்து தகவல்கள்  வெளியாகியுள்ளதாக  துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .