2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கைதை எதிர்த்து அசாத்சாலி மனு

Editorial   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்விதமான காரணங்களுமின்றி தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகுமெனத் தெரிவித்து, மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது சட்டத்தரணியான கௌரி சங்கர் தவராசாவினால் இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நேற்று (05) தாக்கல் செய்யப்பட்டது.

தடுப்புக்காவலிலிருந்து தன்னை விடுவிக்க கட்டையிடுமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​அந்த கட்டளையை, சட்டமா அதிபர், ​பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர் நிஷாந்த டி சொய்சா, அதன் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அவ்வமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கே பிறப்பிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

​இதேவேளை, மேலே குறிப்பிடப்பட்டவர்களே பிரதிவாதிகளாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X