2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கொட்டகலையில் 90 பேருக்கு பி.சி.ஆர்

Editorial   / 2021 ஜனவரி 02 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை   சுகாதார வைத்திய அதிகார காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  90 பேருக்கு பி.சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என வைத்திய அதிகாரி ஜே.கணேஷ் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர் என்ற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர்.

கொட்டகலை, தலவாக்கலை, வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வாகனங்களின் ஊடாக அழைத்து வரப்பட்டு கொட்டக்கலை பிரதேச சபை  வளாதகத்தில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி நபர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில், 48 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X