Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தாவில் பெண் பயிற்சி வைத்தியர், வைத்திய வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (27) தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | West Bengal: Police detain protestors from Howrah Bridge, who are agitating here as part of 'Nabanna Abhiyan' march over RG Kar Medical College and Hospital rape-murder case. pic.twitter.com/0bv3QMMMub
— ANI (@ANI) August 27, 2024
ஹவுரா பாலத்தின் முனை மற்றும் சந்திரகாச்சி ரயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதோடு கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். மேலும், பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தினர்.
தலைமைச் செயலகம் நோக்கி இன்று நடைபெறும் பேரணியில் மேற்கு வங்காள பயிற்சி வைத்தியர்கள் சங்கம் பங்கேற்கவில்லை. ஆனால், கொல்கத்தாவில் புதன்கிழமை (28) மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஷியாம்பஜாரில் தொடங்கி தர்மதலா வரை பேரணி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
புதிதாக உருவாக்கப்பட்ட பாசிம் பங்கா சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கொல்கத்தா கல்லூரி சதுக்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, கொல்கத்தா பொலிஸார் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான 4 மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
54 minute ago
1 hours ago