2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையையொட்டி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல அபேகம பகுதியிலுள்ள வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், போக்குவரத்து நெரிசல் மற்றும் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, சாரதிகளை மாற்றுப் பாதைகளுக்கு வழிநடத்துமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .