S. Shivany / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய இதுவரை 40, 380 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 598 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 235 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இவர்களிடையே அவிசாவளை பிரதேசத்தில் மாத்திரம் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 84 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், கடந்த இரு தினங்களாக கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படினும், அவிசாவளை பிரதேசத்தில் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago