Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் நலன் கருதி இலகு ரயில் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 07 ரயில் வீதிகள் இனங்காணப்பட்டுள்ளதாக, அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்யரத்ன தெரிவித்துள்ளார்.
07 ரயில் வீதிகளில் ஒரு வீதியை ஜப்பான் நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனமும், ஏனைய 6 வீதிகள் மூன்று பக்கேஜ்களாக தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் நிர்மாணிக்கவுள்ளன. இதற்கென 17 வெ ளிநாட்டு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் (2019), முதற் பகுதியில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இராகம, கடவத்தை,கோட்டை,பம்பலப்பிட்டிய ஊடாக கிருலப்பனை வரை 33 கிலோ மீற்றர் நீளமான வீதியும், களனி,தெமட்டகொட,பொரளை,நாராஹேன்பிட்டி, நுகேகொட ஊடாக மொரட்டுவ வரை 28 கிலோ மீற்றர் நீளமான வீதியும், ஹூணுப்பிட்டிய, கொஸ்வத்த ஊடாக, கொட்டாவை வரை, 22.3 கிலோ மீற்றர் வீதியும் இவ்வாறு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago