2025 ஜூலை 16, புதன்கிழமை

கொவிட்-19 நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்ததுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட விஜய வியாபார குழுமம் மற்றும் ஊஐடீ வர்த்தக நிறுவனம் 15 மில்லியன ரூபாய், இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் சங்கம் ரூ.15.5 மில்லியன் அன்பளிப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அளவையியல் திணைக்களத்தின் பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம், பட்டதாரி பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம என்பன  5 இலட்சம் ரூபாயை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X