2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை: மாணவனும் கைது

Editorial   / 2025 ஜூலை 07 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்  இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான  சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார்.    அதே நேரத்தில் அவரது 15  வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் - மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம்  30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள்  வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X