Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தகுதியானவர் அல்லவென அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கோட்டாபய இலங்கையின் தற்போதைய அரச பணியாளர் அல்லவெனவும், அவரால் இதுவரை மக்களுக்கு எந்தச் சேவைகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென்றும் அமைச்சர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பாதுகாப்புக்கு 17 பொலிஸார் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், கோட்டாவுக்கு 25 இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ்மா அதிபர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக் குறித்து நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டால், தண்டனை வழங்குவது அவசியமெனவும் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .