Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 நவம்பர் 08 , மு.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப் பகுதியில் உள்ள 20க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் 30 மீற்றர் கொங்கிறீட் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு, அண்மையில் மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு, விரைவில் மகா கும்பாபிசேகம் காணவிருக்கும் பாண்டிருப்பு விஷ்ணு கோவிலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோவில் முன்னாலுள்ள கொங்கிறீட் வீதி கடலினுள் அள்ளுண்டுள்ளது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஸ்தலத்துக்குச் சென்று, கோவில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிதோடு, கடலோரப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.அருணனிடன் இது விடயத்தை எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, கடலோரப் பகுதியில் கல் அணை இடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உத்தியோகத்தர் அருணன், உறுப்பினர் ராஜனிடம் உறுதியளித்தார்.
இதேவேளை, கடந்த சில நாள்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து, கடலுக்குள் வீழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
35 minute ago
47 minute ago