2025 ஜூன் 12, வியாழக்கிழமை

க்ளப் வசந்த கொலை ; சந்தேகநபர்களுக்கு பிணை

Freelancer   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் இன்று அனுமதி வழங்கியுள்ளார். 
 
இதன்படி, 8 சந்தேகநபர்களும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன் சந்தேகநபர்களின் கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். 
 
இதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேகநபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13