2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சு.க.வை காட்டிக்கொடுக்கமாட்டேன்: மஹிந்த

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான், ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊரபொக்கவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தை 27ஆம் திகதியன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு ஓடாத ஒருவன், நான்தான். ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கட்சியை காட்டிக்கொடுக்காதவன் நான். கட்சியில் தற்போது இருக்கின்ற பலர், காட்டிக்கொடுத்தனர். நான், காட்டிக்கொடுக்கவில்லை, காட்டிக்கொடுக்கவும் மாட்டேன். போகின்ற போக்கை பார்த்தால், கட்சி இருக்குமா, இருக்காதா என்று கூறமுடியாது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X