Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட 'சிங்க லே' இயக்கத்தினர், புதன்கிழமை (06) மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர்.
யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் 'சிங்கள ஜாதிக பலமுலுவ' என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான 'சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்' என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார்.
முன்னர் பொது பல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இந்தப் புதிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் பூசல்களைத் தமது இயக்கத்தினுள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவ்வியக்கம் இதன்போது அறிவித்தது.
நுகேகொடையில் முஸ்லிம்கள் சிலரின் வீட்டுச் சுவர்களில் 'சிங்க லே' எனும் சொல் எழுதப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago