2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிசிலியாவுக்கான விளக்கமறியலும் நீடிப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பினாஸ் அன்ட் கிரடிட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டார்களின் நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.

அவர், இந்த வழக்கின் 8 ஆவது சந்தேகநபராவார். சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X