2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரின் உடல் நிலை தொடர்பில் வைத்திய அறிக்கை கிடைக்கத் தாமதமாவதால், இது தொடர்பில் அறிக்கை வழங்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் நீதிமன்றத்தில் கோரினர்.

சேமிப்பாளர்களின் 4.3 பில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X