2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சேத விவரங்கள் தொடர்பில் நாளை முதல் கணக்கெடுப்பு

George   / 2016 ஜூன் 08 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பின்போது, சேதமடைந்த பொதுமக்களின் சொத்துகள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகள் நாளை வியாழக்கிழமை(09) ஆரம்பமாகவுள்ளதாக சீதாவாக்க பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார தெரிவித்துள்ளார்.

வெடிப்பினால் சேதமடைந்த வீடுகள், வியாபார நிலையங்கள், வாகனங்கள், பயிர்ச்செய்கை மற்றும் வீடுகளில் இருந்த சொத்துகள், உபகரணங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு எடுக்கப்படவுள்ளது.

ஆயுத களஞ்சியசாலை வெடித்து பாதிக்கப்பட்ட வீடுகள் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி கிராம சேவகர்கள் மற்றும் அவருக்கு உதவி செய்யும் நபர் மற்றும் அதிகாரி ஒருவரும் சென்று இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .