Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Niroshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மனித உரிமை ஆர்வலரும் பெண்ணிலைவாதியுமான சாந்தி சச்சிதானந்தனின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றிருக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சாந்தியின் மறைவையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அனுதாப செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சாந்தி சச்சிதானந்தம் சிறுபராயம் முதல் தான் சமூகத்தில் அவதானித்து வந்த சமூக அநீதிகள், ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக தனது அறிவையும் நிறுவன சக்தியையும் பயன்படுத்த தீர்மானித்தார்.
கட்டடக் கலைஞராக அவர் இருந்த போதிலும் சமூக சேவைப் பணிகளிலேயே மரணிக்கும் வரை ஈடுபட்டார்.
தனது தலைமையின் கீழ் 'விழுது' எனும் மனித வள ஆற்றல் மேம்பாட்டு மையத்தை அமைத்து விதவைகளுக்கும் வன்முறைகளுக்கு இலக்கான பெண்கள், பிள்ளைகளுக்காகவும் சாந்தி சச்சிதானந்தம் செய்த பணிகள் இன எல்லைகளைக் கடந்ததாகும்.
நிருவாகக் கட்டமைப்புக்கள் சரியான ஜனநாயக வழிக்கு வரவேண்டுமானால் பெண் பிரதிநித்துவம் உரிய விகிதாசாரத்தில் பேணப்பட வேண்டும் என்பதை மிக உறுதியாக நம்பிய சாந்தி சச்சிதானந்தம் அந்த நோக்கத்தை அடைவதற்காக மரணிக்கும் வரை செயலுறுதியுடன் பணியாற்றினார்.
சாந்தி சச்சிதானந்தத்தின் மறைவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago