2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனி, உப்பு, எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனி, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுக்கள் தென்பட்டுள்ளன.

இதேவேளை,  நீரிழிவு நோயால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நோய்க்கு பிரதான காரணமாக உள்ள  சீனி,எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றின் வரியினை கூட்டவேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு, கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடத்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, 'சுவை என்பது ஒரு எண்ணம் மாத்திரமே. அவை மூளையில் பதியப்பட்டுள்ளவை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான உணவில் விருப்பம் ஏற்படும். சுவையினை கட்டுப்படுத்தி நிறையுணவுடன் கூடிய ஒரு உணவினை எடுத்துக்கொள்வதற்கு சமூகத்தினருக்கு பழக்கப்படுத்த வேண்டும்.' எனத் தெரிவித்தார்.

வெள்ளையர்கள் தான் சீனியை உணவினை உட்கொள்ளப்பழக்கினர். ஆனால், அவர்களே தற்போது சீனி உண்ண வேண்டாம் என்கின்றார்கள். அவ்வாறே உப்பு, எண்ணெய் கலந்த உணவுப்பழக்க வழக்கத்தை நம்மவர் மத்தியில் கொண்டுவந்தவர்கள் ஆனால், தற்போது அவர்களே அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கின்றனர். 

சீனி, எண்ணெய், உப்பு ஆகியவற்றின் வரியினை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் இவற்றின் பாவனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X