2025 ஜூன் 12, வியாழக்கிழமை

சீனியின் விலை அதிகரிப்பு?

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரி (தீர்வை) அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியின் மொத்த விற்பனை விலை அதிகரிக்கக்கூடும் என்று, பண்ட இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், சிவப்பு சீனியின் விலை, சுமார் 15 ரூபாயினால் அதிகரிக்கக்கூடம் என்றும் அச்சங்கம் கூறியது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான பண்ட வரியை, நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

ஒரு கிலோகிராம் சீனிக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த 25 சத வரி, தற்போது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இறக்குமதி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு, 15 ரூபாய் விசேட பண்ட வரி விதிக்கப்பட்ட நிலையில், அது நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனியின் விலை, எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என, நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13