2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சேயா கொலைக் குற்றவாளிக்கு மரணத்தண்டனை

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சந்தவமியை படுகொலை செய்தார் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமன் ஜயதிலக்கவை குற்றவாளியாக இனங்கண்ட நீர்கொழும்பு  மேல் நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை (15) தீர்ப்பளித்தது.

இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த 3ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், தீர்ப்பு இன்று 15ஆம் திகதிக்கு தள்ளிப்போடப்பட்டிருந்தது.

சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று, வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டார்.

இந்நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள வாய்க்காலிலிருந்து இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 13ஆம் திகதியன்று, அவரது சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது.

படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான சமத் ஜயலத்தின் மரபணு அறிக்கை (டி.என்.ஏ), படுகொலை செய்யப்பட்ட சிறுமியான சேயா சந்தவமியின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணுக்களுடன் பொருந்தியிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 29ஆம் திகதியன்று நிறைவடைந்தது. சாட்சி அட்டவணையில் 30 பேர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதில் அறுவர் மட்டுமே சாட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.(படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X