2025 மே 19, திங்கட்கிழமை

சார்ஜன் மீது ஓ.ஐ.சி தாக்குதல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின்; தாக்குதலுக்கு இலக்கான  சார்ஜன், கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

சேவையில் இருந்த சார்ஜன், முறைப்பாட்டு புத்தகத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடந்த வியாழக்கிழமை(08) மாலை காண்பிப்பதற்கு சென்ற போது, முறைப்பாட்டு புத்தகத்தினால் சார்ஜனின் காதில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட சம்பவம் நிகழ்ந்த போது சேவையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக அவிசாவளை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் துசார தலுவத்த தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன், கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X