2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சீருடைக்கான வவுச்சர் டிச.5க்கு முன் கிடைக்கும்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

மாணவர்களுக்கான இலவச சீருடை துணிக்குப் பதிலான வவுச்சர்கள், டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாணவர்களுக்காக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சீருடைகளுக்கான துணிகள், தரமில்லாதவையாகும். இதனூடாக இடைத்தரகர்களே இலாபமீட்டினர். சீருடை விநியோகத்தில் கொள்வனவு, பொதிசெய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகத்துக்கு பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. இதனால் இந்த மாற்றுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகளுக்கு ஏற்ப சீருடைத் துணிகளின் அளவு மாறுபடும். அதேபோல, சீருடைக்கான வவுச்சர் தொகையும் மாறுபடும்.

முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு ஆகக்குறைந்த தொகையாக 400 ரூபாய் பெறுமதியான வவுச்சரும் பௌத்த துறவி மாணவர்களுக்கான காவியுடைக்கு 1,600 ரூபாய் வவுச்சரும் வழங்கப்படும்.

இதன் பிரகாரம், அந்த வவுச்சர்களை பயன்படுத்தி கடைகளுக்குச் சென்று சீருடைத் துணிகளை கொள்வனவு செய்யலாம்.

சீருடைக்கான துணியை கடையில் பெற்றுக்கொண்டமைக்கு ஆதாரமாக கடையால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை, வகுப்பாசிரியரிடம்; கையளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடை உரிமையாளர்கள், அந்த வவுச்சர்களை, இலங்கை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளமுடியும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .