2025 மே 19, திங்கட்கிழமை

சூரியக்குளியல் மேற்கொண்டவருக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில்  தங்கியிருந்து கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணியை, காலி நீதவான் நீதிமன்ற நீதவான் கேசர சமரதிவாகர, 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சுற்றுலாப் பிரயாணி, தினமும் காலை கடலில் நிர்வாணமாக நீராடுவதால், குறித்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பெரும் தொந்தராவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இவர், கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதியிலிருது தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக, விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X