Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியுள்ள ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர், தினமும் காலை கடலில் நிர்வாணமாக நீராடுவதால், குறித்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பெரும் தொந்தராவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர், கடந்த ஒரு மாதகாலமாக தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக, விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் எதனால் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ள முகாமையாளர், இப்படி பிரபலமான சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது மற்றையோருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago