2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுநீரக விவகாரம்: வைத்தியர்களின் கடிதங்கள் மீட்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடமிருந்து, இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை அடங்கிய கடிதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன சந்தேகநபர்களிடம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம், தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில், 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டமை உறுதி செய்யப்படுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X