2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறப்பு பஸ் சேவைகள் 8 முதல் ஆரம்பம்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) முதல் சிறப்பு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தச் சிறப்பு பஸ்  சேவையானது, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவைக்காக 3,000 பஸ்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டள்ளதாவும் அவை தூர இடங்களுக்கு மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மஹரமகம, கடவத்த கடுவலை மற்றும் பாணந்துறையிலிருந்து தெற்கு நெடுஞ்சாலைகளுக்கு பயணிக்கும் பஸ்கள் அதிகமாக காணப்படும் என்றும் 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புதுவருடத்துக்கான சிறப்பு ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X