Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்லக்கதிர்காமம் - புத்தல வீதியிலுள்ள வடிகானிலிருந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இருவரின் சடலங்கள், இன்று புதன்கிழமை (06) காலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சடலங்கள் மீட்கப்பட்ட வடிகானிற்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம், மின்சாரப் பாவனை அற்ற பகுதியொன்றில் வைத்து, நேற்று செவ்வாய்கிழமை (05) இரவு இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேககிக்கின்றனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள், திஸ்ஸமகாராமப் பகுதியைச் சேர்ந்த 42 வயதானவ ஒருவரும் கோரடுவகப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொலைக்கான பின்னணி அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .