2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சாவகச்சேரி விவகாரம்: மேலும் ஐவர் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபரின்  அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X